அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்


அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jun 2021 2:07 AM IST (Updated: 4 Jun 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடும் விழா
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஈரோடு வனக்கோட்டம் சார்பில் 800 மரக்கன்றுகளும், சத்தியமங்கலம் வனக்கோட்டம் சார்பில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
கூடுதல் கட்டிடம்
இந்த விழாவில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் ஆஸ்பத்திரிக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் நிஹார் ரஞ்சன், ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன், ஈரோடு வனச்சரக அதிகாரி ரவீந்திரநாத், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story