சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு


சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:23 AM IST (Updated: 4 Jun 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடுமுடி
சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
பொதுமக்கள் குவிந்தனர்
கொடுமுடி அருகே சென்னசமுத்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக நேற்று அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் சென்னசமுத்திரம், சோளக்காளிபாளையம், சாலைப்புதூர், கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்தனர். 
பரபரப்பு
பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆரம்ப சுகாதார செவிலியர்கள், ஊழியர்கள் திணறினர். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தடுப்பூசி டோக்கன் வாங்குவதற்காக முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் 50 பேருக்கு தான் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story