பெருந்துறை சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 தனியார் தொழிற்சாலைகளுக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

பெருந்துறை சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 தனியார் தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
சென்னிமலை
பெருந்துறை சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணி பதனிடும் தொழிற்சாலை உள்ளது. கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக இந்த தொழிற்சாலை செயல்பட்டதாக பெருந்துறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் வருவாய் துறை மற்றும் தொழில்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி அதிக அளவில் ஆட்களுடன் இயங்கியதால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.
அதேபோல் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் தொழிற்சாலையில் கொரோனா நோய் தடுப்பு விதிகளுக்கு எதிராக அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரியவந்தது. பின்னர் அந்த தொழிற்சாலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story






