மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்தது


மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்தது
x
தினத்தந்தி 4 Jun 2021 4:34 PM IST (Updated: 4 Jun 2021 4:34 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்துள்ளது.

15,229 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 15 ஆயிரத்து 229 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்து 91 ஆயிரத்து 413 ஆக உயா்ந்து உள்ளது. இதில் 54 லட்சத்து 86 ஆயிரத்து 206 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 25 ஆயிரத்து 617 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 974 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 307 பேர் 
ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 97 ஆயிரத்து 394 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

500 நாட்களாக அதிகரிப்பு
தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று அங்கு 961 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 27 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 8 ஆயிரத்து 968 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 965 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 95 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 500 நாட்களாக அதிகரித்து உள்ளது.

Next Story