கோவையில் இன்று 2,810 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 22 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 22 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 33 ஆயிரத்து 646 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 306 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-
அரியலூர் - 246
செங்கல்பட்டு - 909
சென்னை - 1,971
கோவை - 2,810
கடலூர் - 488
தர்மபுரி - 318
திண்டுக்கல் - 308
ஈரோடு - 1,619
கள்ளக்குறிச்சி - 243
காஞ்சிபுரம் - 388
கன்னியாகுமரி - 712
கரூர் - 337
கிருஷ்ணகிரி - 377
மதுரை - 481
நாகை - 516
நாமக்கல் - 719
நீலகிரி - 515
பெரம்பலூர் - 209
புதுக்கோட்டை - 288
ராமநாதபுரம் - 171
ராணிப்பேட்டை - 306
சேலம் - 1187
சிவகங்கை - 187
தென்காசி - 226
தஞ்சாவூர் - 1004
தேனி - 445
திருப்பத்தூர் - 341
திருவள்ளூர் - 583
திருவண்ணாமலை - 497
திருவாரூர் - 576
தூத்துக்குடி - 365
திருநெல்வேலி - 256
திருப்பூர் - 1,161
திருச்சி - 689
வேலூர் - 271
விழுப்புரம் - 521
விருதுநகர் - 411
மொத்தம் - 22,651
Related Tags :
Next Story