ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,619 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,619 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,619 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
1,619 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவையில் 2 ஆயிரத்து 810 பேரும், சென்னையில் 1,971 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 1,619 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 63 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.
12 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் கடந்த மாதம் 5-ந்தேதியும், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் 15-ந் தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் 20-ந்தேதியும், 65 வயது முதியவர், 35 வயது பெண் மற்றும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த 25-ந் தேதியும் இறந்தனர்.
மேலும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்து 47 வயது ஆண் கடந்த 29-ந் தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் 31-ந்தேதியும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது ஆண் 2-ந்தேதியும், 68 வயது முதியவர் மற்றும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 37 வயது ஆண் ஆகியோர் கடந்த 3-ந்தேதியும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 401 ஆக உயர்ந்தது.
16,078 பேர் சிகிச்சை
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,616 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 46 ஆயிரத்து 548 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 78 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தெங்குமரஹாடா
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ள மாயாற்றங்கரையில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா வன கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சித்திரம்பட்டி, சுடுகாடு மூலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






