கே.என்.பாளையம் அருகே கர்நாடக மதுபானங்களை கடத்தி வந்த 2 பேர் கைது ; 166 மது பாக்கெட்டுகள்- கார் பறிமுதல்
கே.என்.பாளையம் அருகே கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 166 மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
டி.என்.பாளையம்,
கே.என்.பாளையம் அருகே கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 166 மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போலீசார் கே.என்.பாளையம் வன சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையின்போது காரில் 2 அட்டை பெட்டிகளில் கர்நாடக மாநிலத்தின் 166 மதுபான பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் வந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் டி.என்.பாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 32), சசிக்குமார் (30) என்பதும், ஊரடங்கு காரணமாக இங்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், கர்நாடக மாநிலத்தில் மதுபானங்களை வாங்கி காரில் கடத்தி வந்ததும்,’ தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 166 மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story