கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் புகார்; முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்


கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் புகார்; முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்
x

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைத்து இருப்பதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

ஈரோடு
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைத்து இருப்பதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
முதல்-அமைச்சருக்கு மனு
ஈரோடு சென்னிமலை ரோடு சேனாபதிபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) இங்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பள்ளிக்கூடத்தின் மீது புகார் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கட்டணம்
எங்கள் குழந்தைகள் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தி வந்தனர். நாங்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தி இருக்கிறோம். கோர்ட்டு உத்தரவின் படி தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அந்த உத்தரவின்படி மொத்தமாக 75 சதவீதம் கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கிறோம்.
ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு ஒரு ‘பிராண்ட் நேம்’ (குறியீட்டு பெயர்) உள்ளது. எனவே 100 சதவீதம் முழுமையாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
தேர்வு முடிவு
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்கனவே 7 மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்து இருந்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்றோர்களுக்கு தொலைபேசி அழைப்பு மற்றும் இ-மெயிலில் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். கோர்ட்டு உத்தரவுக்கு மட்டுமே எங்கள் பள்ளி கட்டுப்படும் என்ற செய்தியை தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி 100 சதவீதம் கட்டணம் செலுத்த தவறினால், மாணவ- மாணவிகள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது என்று மிரட்டும் வகையில் பேசினார்கள். தொடர்ந்து முழு கட்டணத்தையும் செலுத்த வற்புறுத்தி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்றால் 1½ ஆண்டுகளாக மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். பெற்றோர்களாகிய நாங்கள் தொழில் நசிந்து அன்றாட வாழ்க்கையை ஓட்ட சிரமப்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கூடத்தின் நடவடிக்கையால் எங்கள் குழந்தைகளும் நாங்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். கட்டணம் செலுத்தாத மாணவ- மாணவிகளின் ஆண்டு இறுதி தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைத்து உள்ளனர்.
ரத்து
இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் தலையிட்டு கடந்த ஆண்டு கல்விக்கட்டணத்தை ரத்து செய்யவும், வரும் கல்வி ஆண்டில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே செலுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நல்ல தீர்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம். 
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story