நம்பியூர், பர்கூர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை; 10 குட்டைகள் நிரம்பின


நம்பியூர், பர்கூர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை; 10 குட்டைகள் நிரம்பின
x
தினத்தந்தி 5 Jun 2021 2:56 AM IST (Updated: 5 Jun 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர், பர்கூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதில் நம்பியூர் பகுதியில் உள்ள 10 குட்டைகள் நிரம்பின.

ஈரோடு
நம்பியூர், பர்கூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதில் நம்பியூர் பகுதியில் உள்ள 10 குட்டைகள் நிரம்பின. 
நம்பியூர்
நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் நம்பியூரில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. 
அதே நேரத்தில் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம், அஞ்சானூர் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிக்கு காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 6.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் வேமாண்டம்பாளையம், அஞ்சானூர், பட்டிமணியகாரன்பாளையம், எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பி வழிந்தன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘இதுபோன்ற பலத்த மழை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்தது. இந்த மழையால் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கிணறுகளுக்கு தண்ணீரும் கிடைக்கும். இதனால் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும். 
மானாவரி பயிர்களான நிலக்கடலை, சோளம், துவரம் பருப்பு போன்றவைகளை பயிரிட இந்த மழை ஏதுவாக இருக்கும்,’ என மகிழ்ச்சி தெரிவித்தனர்.  
அந்தியூர்
இதேபோல் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 4.30 மணி வரை கனமழை பெய்தது. மேலும் தாமரைக்கரை, தேவர்மலை, ஊசிமலை, தட்டகரை, மடம் ஆகிய இடங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது,

Related Tags :
Next Story