கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி சாவு


கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி சாவு
x
தினத்தந்தி 5 Jun 2021 3:07 AM IST (Updated: 5 Jun 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

டி.என்.பாளையம்
கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
மின்சாரம் தாக்கியது
கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி அக்ரகார வீதியில் வசித்து வருபவர் வெள்ளியங்கிரி (வயது 60). கூலித் தொழிலாளி. 
இவருக்கு ஸ்ரீமதி (8) என்ற ஒரே ஒரு மகள் இருந்தாள். இவள் நேற்று மதியம் வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தாள்.
அவரது வீடு அருகே மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் அருகே செல்லும் மின் கம்பிைய (ஸ்டேகம்பி) ஸ்ரீமதி எதிர்பாராதவிதமாக தொட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கிய அவள் தூக்கி வீசப்பட்டாள்.
சாவு
உடனே உறவினர்கள் அவளை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு் ஸ்ரீமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஸ்ரீமதியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story