கோவையில் இன்று 2,663 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 21 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 21 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 16 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 32 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 32 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-
அரியலூர் - 192
செங்கல்பட்டு - 862
சென்னை - 1,789
கோவை - 2,663
கடலூர் - 590
தர்மபுரி - 370
திண்டுக்கல் - 298
ஈரோடு - 1,569
கள்ளக்குறிச்சி - 226
காஞ்சிபுரம் - 372
கன்னியாகுமரி - 633
கரூர் - 322
கிருஷ்ணகிரி - 359
மதுரை - 468
நாகை - 510
நாமக்கல் - 682
நீலகிரி - 517
பெரம்பலூர் - 158
புதுக்கோட்டை - 137
ராமநாதபுரம் - 133
ராணிப்பேட்டை - 283
சேலம் - 1171
சிவகங்கை - 146
தென்காசி - 291
தஞ்சாவூர் - 929
தேனி - 391
திருப்பத்தூர் - 336
திருவள்ளூர் - 525
திருவண்ணாமலை - 482
திருவாரூர் - 431
தூத்துக்குடி - 358
திருநெல்வேலி - 271
திருப்பூர் - 1,104
திருச்சி - 651
வேலூர் - 248
விழுப்புரம் - 471
விருதுநகர் - 472
மொத்தம் - 21,410
Related Tags :
Next Story