ஈரோடு மாவட்டத்தில், 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பலத்த மழை; புஞ்சைபுளியம்பட்டியில் குட்டைகள் நிரம்பின

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள குட்டைகள் நிரம்பின.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள குட்டைகள் நிரம்பின.
புஞ்சைபுளியம்பட்டி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இதனால் ரோடுகளில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான பனையம்பள்ளி, உயிலம்பாளையம், மல்லியம்பட்டி, காராபாடி, காவிலிபாளையம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. 4 மணி நேரம் இந்த மழை பெய்தது. இதேபோல் நேற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 2-வது நாளாக புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நேற்று பெய்த மழையால் உயிலம்பாளையம் குட்டை, மல்லியம்பட்டி குட்டை ஆகிய 2 குட்டைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதேபோல் காவிலிபாளையம் பகுதியில் உள்ள 2 குட்டைகள் நிரம்பியதுடன் அதில் இருந்து மழை நீர் வெளியேறியது. இந்த நீர் கரைபுரண்டு காவிலிபாளையம் குளத்துக்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் பெருக்கெடுத்து ஓடியது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதிகளில் 2-வது நாளாக பர்கூர், தாமரைக்கரை, தாளக்கரை, துருசனாம்பாளையம், தேவர்மலை, வெள்ளிமலை, ஊசி மடம் ஆகிய கிராமங்களில் நேற்று பகல் 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. பின்னர் மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பர்கூர் மலைக்கிராமங்களில் மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.
தாளவாடி- அம்மாபேட்டை
தாளவாடி, திகனாரை, தமிழ்புரம், தலமலை, ஆசனூர், திம்பம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் மாலை 3 மணி அளவில் தூறல் மழை பெய்தது. பலத்த மழையால் திம்பம் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியது.
இதேபோல் அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், சென்னம்பட்டி, ஜர்த்தல், கொமராயனூர், சனி சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story