ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,569 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,569 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 6 Jun 2021 2:34 AM IST (Updated: 6 Jun 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,569 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,569 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
1,569 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 64 ஆயிரத்து 596 ஆக உயர்ந்தது.
24 பேர் பலி
இதற்கிடையில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி கடந்த மாதம் 18 -ந் தேதியும், 54 வயது ஆண், 64 வயது மற்றும் 67 வயது முதியவர்கள் ஆகியோர் 21-ந்தேதியும், 36 வயது பெண், 85 வயது மற்றும் 75 வயது முதியவர்கள் ஆகியோர் 22-ந்தேதியும், 52 வயது ஆண், 59 வயது ஆண் ஆகியோர் 24-ந்தேதியும், 60 வயது பெண் 27-ந்தேதியும், 69 வயது மூதாட்டி 30-ந்தேதியும் இறந்தனர்.
மேலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவர் மற்றும் 73 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த 31-ந்தேதியும், 46 வயது பெண், 50 வயது பெண், 63 வயது மற்றும் 70 வயது முதியவர்கள் ஆகியோர் 1-ந்தேதியும், 78 வயது மூதாட்டி 2-ந் தேதியும், 78 வயது மூதாட்டி, 72 வயது மற்றும் 60 வயது முதியவர்கள், 45 வயது ஆண் ஆகியோர் 3-ந்தேதியும், 61 வயது மற்றும் 62 வயது முதியவர்கள் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்தது.
1,721 பேர் குணமடைந்தனர்
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,721 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 48 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 15 ஆயிரத்து 902 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story