காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 6:34 PM IST (Updated: 6 Jun 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் அழுகிய காய்கறி கழிவுகள், பழக்கழிவு, உணவு கழிவு, மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு எந்திரங்கள் மூலம் அரைத்து தொட்டிகளில் நிரப்பப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த உரம் தயாரிக்கும் கூடத்தை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சம்பத் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தினகரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து வைப்பூர் ஊராட்சியில் கூழங்கலசேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி கட்டிட பணி மற்றும் நாட்டரசன் பட்டு ஊராட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணியை ஆய்வு செய்தார்.

Next Story