செங்கல்பட்டு மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


செங்கல்பட்டு மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 6 Jun 2021 7:15 PM IST (Updated: 6 Jun 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளிலும் பொது இடங்களிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் சேசவன் மரக்கன்றுகள் நட்டார். ஊழியர்கள் பொது சுகாதார பணிகளை செய்தனர். அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி உள்ளிட்ட ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, மாலதி மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். அப்போது ஒரத்தி ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story