சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதம்


சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதம்
x
தினத்தந்தி 7 Jun 2021 3:30 PM IST (Updated: 7 Jun 2021 3:30 PM IST)
t-max-icont-min-icon

சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டியது மராட்டியத்தின் பொன்னான தருணம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சிவாஜிக்கு மரியாதை
சத்ரபதி சிவாஜி 1674-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி மன்னராக முடிசூட்டிக்கொண்டார். மராத்தா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரான சத்ரபதி சிவாஜி மன்னர் ராய்காட்டை தலைநகராக்கி அங்கு பல்வேறு கட்டிடங்களை கட்டினார். இந்தநிலையில் சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டி கொண்ட நாளையொட்டி, அவருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மரியாதை செலுத்தினார். மேலும் முதல்-மந்திரி, சத்ரபதி சிவாஜி மாநில நலனில் அதிக அக்கறை கொண்டு இருந்ததாகவும், தாய் நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

பொன்னான தருணம்

மேலும் இது குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வௌியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:-

சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டிய நாளையொட்டி அவருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மரியாதை செலுத்தினார். இந்த நாள் மராட்டியத்தின் இருதயத்தில் பொறிக்கப்பட்ட பொன்னான தருணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story