ஆவடி அருகே ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு; தாசில்தார் அதிரடி


ஆவடி அருகே ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு; தாசில்தார் அதிரடி
x
தினத்தந்தி 7 Jun 2021 5:35 PM IST (Updated: 7 Jun 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

ஆவடியை அடுத்த பம்மதுகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புஞ்சை தரிசு நிலத்தை, மர்ம நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக மாற்றி பொதுமக்களுக்கு ரூ.2 லட்சம் வீதம் இடத்தை விற்றதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தை வாங்கியவர்கள், நிலத்தை சுற்றி வேலி அமைத்தும், வீடுகள் மற்றும் சிறு சிறு குடிசைகள் அமைத்தும் இருந்தனர். இதுகுறித்து வந்த புகாரின்பேரில் ஆவடி தாசில்தார் செல்வம், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த 16 குடிசைகள், ஒரு தகரத்தால் வேயப்பட்ட வீடு, ஒரு சிமெண்டு சீட் வீடு உள்ளிட்டவைகளை பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறை ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story