மேலும் 640 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் மேலும் 640 பேருக்கு கொேரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,138 பேர் குணமடைந்தனர்.
மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 99 ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 1,236 பேரும், வீடுகளில் 7 ஆயிரத்து 34 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,628 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சவரிராயலு வீதியை சேர்ந்த 73 வயது மூதாட்டி, கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, அரியாங்குப்பம் கென்னடி கார்டனை சேர்ந்த 40 வயது ஆண், தேங்காய்த்திட்டை சேர்ந்த 75 வயது முதியவர், வேல்ராம்பட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர்.
ஜிப்மரில் கோரிமேட்டை சேர்ந்த 43 வயது பெண், வேல்ராம்பட்டை சேர்ந்த 49 வயது ஆண், மாகியில் வீட்டு தனிமையில் இருந்த 87 வயது மூதாட்டி, 59 வயது பெண், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பெசன்ட் நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, சன்னதி வீதியை சேர்ந்த 62 வயது முதியவர், பள்ளிவாசல் வீதியை சேர்ந்த 72 வயது முதியவர், அம்பகரத்தூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, நல்லம்பல்லை சேர்ந்த 85 வயது முதியவர் ஆகியோர் இறந்துள்ளனர்.
புதுவையில் குணமடைவது 90.93 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 87 பேரும், முன் களப்பணியாளர்கள் 81 பேரும், பொதுமக்கள் 4 ஆயிரத்து 104 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்து 729 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story