பத்திர பதிவுக்கு அனுமதி அளித்தும் வெறிச்சோடிய சார்பதிவாளர் அலுவலகங்கள்
பத்திர பதிவுக்கு அனுமதி அளித்தும் சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு
பத்திர பதிவுக்கு அனுமதி அளித்தும் சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடத்தூர்
ஊரடங்கில் நேற்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் சார்பதிவாளர் அலுவலகங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன.
அதன்படி கோபியில் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகம்சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. குறைந்த அளவு பணியாளர்கள் வேலைக்கு வந்திருந்தார்கள். ஆனால் பத்திர எழுத்தர்களின் அலுவலகங்கள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் நேற்று யாரும் பத்திர பதிவு செய்ய வரவில்ைல. அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பத்திர பதிவு அலுவலகம் அருகே உள்ள கோபி யாகூப் வீதியில் நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதாலும் பொதுமக்கள் யாரும் பத்திர பதிவு செய்ய வரவில்லை என்று கூறப்படுகிறது.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. பதிவு செய்ய வருபவர்கள் சமூக இடைவௌியை கடைபிடிக்க வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. ஆனால் பதிவு செய்வதற்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை. பத்திரம் எழுதும் அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. அவர்கள் வேலைக்கு வந்தால் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நம்பியூர்
நம்பியூர் சார்பதிவாளர் அலுவலகம் 30 சதவீத பணியாளர்களுடன் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் பத்திர எழுத்தர்களின் அலுவலகங்கள் திறக்கப்படாததால் பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை. அதனால் வருகிற 14-ந் தேதி வரை பத்திர பதிவு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுமுடி
கொடுமுடி சார்பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. குறைந்த அலுவலர்களே பணிக்கு வந்திருந்தார்கள். ஆனால் பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை. இதேபோல் பத்திர எழுத்தர்கள் யாரும் தங்களுடைய அலுவலகத்தை திறந்து பணியில் ஈடுபடவில்லை.
மொத்தத்தில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் வெறிச்சோடின.
Related Tags :
Next Story