மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் தண்ணீர் செல்வதில் தடை உள்ளதா?. கலெக்டர் ஆய்வு


மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் தண்ணீர் செல்வதில் தடை உள்ளதா?. கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2021 4:35 PM GMT (Updated: 8 Jun 2021 4:35 PM GMT)

மோர்தானா அணை திறக்க இருப்பதை முன்னிட்டு இடதுபுற கால்வாயில் தண்ணீர் செல்வதில் தடை ஏதும் உள்ளதா என்பது குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

கே.வி.குப்பம்

அணை திறக்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பசன வசதி, பொதுமக்களின் குடிநீர்த்தேவைகள் ஆகியவற்றை முன்னிட்டு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென பூவை எம்.ஜெகன்மூர்த்தி, எம்.எல்.ஏ. கலெக்டரை கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில் மோர்தானா அணையின் இடது, வலது புறக்கால்வாய்கள் ரூ.48 லட்சத்தில் தூர்வாரப்பட்டு, 18-ந் தேதி மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

கலெக்டர் ஆய்வு 

இதனால் சிலர் ஆங்காங்கே கால்வாய்களில் உடைப்புகளை ஏற்படுத்தி தண்ணீரைத் தங்கள் ஊருக்கு திருப்பி விட முயற்சிகள் செய்துவருகின்றனர். இதற்காக சில இடங்களில் குழாய்களை அமைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் பகுதகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இடதுபுற கால்வாய் பகுதியில் உள்ள கே.வி.குப்பம் தாலுகா அன்னங்குடி, காளாம்பட்டு, மேல்மாயில், காங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அணையின் இடதுபுறக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் செல்வதில் தடை ஏதும் உள்ளதா?, கால்வாய் உடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? எந்த அளவுக்கு களைச்செடிகள் உள்ளது? என்று ஆய்வு செய்தார். 

உதவி கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் கோபி, துணை தாசில்தார் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story