ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:49 PM GMT (Updated: 8 Jun 2021 9:49 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
அந்தியூர்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்கவேண்டும். தமிழகத்திற்கு உரிய கொரோனா தடுப்பூசியை உடனே வழங்க வேண்டும், செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் மருந்து உற்பத்தி நிறுவனத்தை, தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும், தமிழகத்துக்கு சேரவேண்டிய ஜி.எஸ்.டி. வரி வசூல் தொகையை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 
கோபி
கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கட்டுமான சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், கோகுல்ராம் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 
பெருந்துறை
பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.தங்கவேல் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். 
 ஏ.ஐ.டி.யு.சி. மாநில தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 
சென்னிமலை
சென்னிமலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணை செயலாளர்ஆர்.கண்ணுச்சாமி, துணை செயலாளர் எம்.செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் என்.ஆறுமுகம், மு.பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story