நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி


நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 6:41 AM IST (Updated: 9 Jun 2021 6:41 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 51). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் நகர மன்ற உறுப்பினராவார். தற்போது காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட வரத்தக அணி துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று இவர் தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சீபுரம் டி.கே. நம்பி தெரு வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்த்திபனை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பார்த்திபனுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்திபனின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story