பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது


பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 1:19 AM GMT (Updated: 9 Jun 2021 1:19 AM GMT)

பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சி மன்றதலைவராக பதவி வகித்து வருபவர் காயத்திரி. இவரது கணவர் கோதண்டன் (வயது 37). முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர். இந்த ஊராட்சியில் உள்ள ஒரு குளத்தில் மீன் பிடிப்பது சம்பந்தமாக சேது (45) என்பவருக்கும், கோதண்டனுக்கும் இடையே தகராறு எழுந்தது.

இந்த பிரச்சினை கோஷ்டி பிரச்சினையாக உருவெடுத்தது. எனவே இரண்டு தரப்பினரும் ஒருவரை, ஒருவர் தரக்குறைவாக பேசிக் கொண்டனர். இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார் 2 தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தார்.

கைது

இந்த நிலையில், பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கோதண்டனை சேது மற்றும் மாரிமுத்து (46) ஆகியோர் வழிமறித்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோதண்டன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் சேது மற்றும் மாரிமுத்துவை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story