மாவட்ட செய்திகள்

நம்பியூர், சித்தோடு பகுதியில்220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு + "||" + sarayam

நம்பியூர், சித்தோடு பகுதியில்220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

நம்பியூர், சித்தோடு பகுதியில்220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம், சோளகாடு, தாசையன்காடு பகுதிகளில் சாராய ஊறல் இருப்பதாக நம்பியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நம்பியூர் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் ராயர்பாளையம் தாசையன் காடு பகுதியில் சின்னப்பாப்பான் என்பவர் 50 லிட்டர் சாராய ஊறலும், மேட்டுக்காடு பகுதியில் பெரிய பாப்பான் என்பவர் 60 லிட்டர் சாராய ஊறலும், சோளக்காடு மீன்குட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் 60 லிட்டர் சாராய ஊறலும் என 170 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே போலீஸ் வருவதை அறிந்ததும் 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சித்தோடு
மேலும் சித்தோடு அருகே உள்ள நசியனூர் கந்தம்பாளையம் காரைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 53) என்பவர் ஊனாத்திபுதூரில் உள்ள தனது வீட்டில் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தைலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவரது வீடு அருகே பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபற்றி அறிந்ததும் முருகேசன் மாயமானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  முருகேசனை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் பகுதியில் சாராயம், கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும்-புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
நாமக்கல் பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது - ஸ்கூட்டர்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர்- மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
3. நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது
நாகை மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர்- மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
4. நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. கடலூர் மாவட்டத்தில் சாராயம், கள் விற்பனை செய்த 13 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் சாராயம், கள் விற்பனை செய்த 13 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.