மாவட்ட செய்திகள்

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது2 பேர் காயம் + "||" + rasan rise

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது2 பேர் காயம்

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது2 பேர் காயம்
சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது. 2 பேர் காயமடைந்தார்கள்.
சென்னிமலை பாண்டியன் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 56). இவரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் பொன்னுசாமி (வயது 48) என்பவரும் நேற்று மாலையில் ஒரு காரில் சென்னிமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை செந்தில்நாதன் ஓட்டி சென்றார்.
சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் சிறுக்களஞ்சி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி செந்தில்நாதனும், பொன்னுசாமியும் லேசான காயம் அடைந்தனர். காரில் இருந்த மூட்டைகள் சிதறின. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் செந்தில்நாதனும், பொன்னுசாமியும் 600 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை சென்னிமலையில் இருந்து கடத்தி ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து உணவு குடிமை பொருள் பாதுகாப்பு துறைக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
2. தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசி
தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
3. ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி
தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
4. காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
வெம்பக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது
கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.