சப்-இன்ஸ்பெக்டரின் ேமாட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
உசிலம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி,ஜூன்.
உசிலம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூர் சிவன்காளைத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவர் தேனி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இரவு நேரத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் உதயசந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற ஆசாமிகளை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த காமராஜ்(வயது 19), விஜயக்குமார்(21) என்பதும், இவர்கள்தான் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார்சைக்கிளை திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை மீட்டு உசிலம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story