கொள்ளையன் சிக்கினான்


கொள்ளையன் சிக்கினான்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:44 AM IST (Updated: 10 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெண்களிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்

வாடிப்பட்டி,ஜூன்.
வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் அய்யங்கோட்டை பகுதியில் போலீசாருடன் நேற்று ரோந்து சென்றார். அப்போது நகரி கண்மாய் கரையில் சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தார். இதில் அவன் அய்யங்கோட்டையை சேர்ந்த சபரிநாதன் (வயது 24) என்பது தெரிய வந்தது. மேலும் அவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் அவன் பெண்களிடம் நகை பறித்துச் ெசன்ற கொள்ளையன் என்பது தெரிய வந்தது.
ஆண்டிபட்டி பங்களாவில் கடந்த ஆண்டு நடந்து சென்ற பெண்ணிடம் 1½ பவுன் தங்க சங்கிலி பறித்ததையும், அலங்காநல்லூரில் ஒரு பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்ததையும் ஒப்புக் கொண்டான். மேலும் அவன் குட்லாடம்பட்டியில் டாஸ்மாக் கடை காவலாளியை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவன் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சபரிநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
1 More update

Next Story