குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொட்டாம்பட்டி, ஜூன்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள காரியேந்தல்பட்டியைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் ராமர் (வயது 33). இவருக்கும், சத்யா (29) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராமர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்த சத்யா நேற்று முன் தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்யாவின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story