நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மளிகை-காய்கறிகள் கடைகள் திறப்பு ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிப்பு


நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மளிகை-காய்கறிகள் கடைகள் திறப்பு ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 1:30 AM IST (Updated: 10 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை-காய்கறிகள் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை-காய்கறிகள் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நீட்டித்து வருகிறது. தற்போது 7-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மளிகை, காய்கறி கடைகளின் நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது.
மருந்து கடைகள்
அதேபோல் மருந்து கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.  இதில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெட்டியாபாளையம், நல்லகட்டிபாளையம், மலையப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதைத்தொடர்ந்து ஊராட்சியின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், ‘ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் வருகிற 14-ந் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும்’ என்று முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஒழலக்கோவில் ஊராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர்த்து காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், இறைச்சிக் கூடங்கள், வியாபார நிறுவனங்கள் விசைத்தறி தொழில்கள், இதர தொழில் நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

Next Story