மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா10 பேர் பலி + "||" + corona

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா10 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா10 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 10 பேர் பலியானார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 10 பேர் பலியானார்கள்.
1,405 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகபட்சமாக 1,780-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள். அதன்பிறகு தினமும் மெதுவாக தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 1,646 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்து 888 ஆக உயர்ந்தது. இதில் 56 ஆயிரத்து 695 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,953 பேர் குணமடைந்தனர். தற்போது 13 ஆயிரத்து 724 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
10 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த மாதம் 31-ந் தேதியும், 70 வயது முதியவர் கடந்த 1-ந் தேதியும், 53 வயது ஆண், 67 வயது மூதாட்டி, 78 வயது முதியவர் ஆகியோர் 5-ந் தேதியும், 65 வயது முதியவர், 85 வயது மூதாட்டி ஆகியோர் 6-ந் தேதியும், 45 வயது ஆண், 54 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும், 62 வயது மூதாட்டி நேற்றும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரேநாளில் 336 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது.
2. மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 188 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 117 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 773 பேர் பாதிப்பு 16 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 773 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் உயிரிழந்தனர்.