கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்


கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:45 AM IST (Updated: 10 Jun 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து...
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு்ள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பவர்கள் அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு் வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
20 மதுபாட்டில்கள்
அப்போது பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக 2 பேர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 20 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் டி.என்.பாளையம் அருகே உள்ள துறையபாளையம்  கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 45), ராஜன் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக தமிழகத்துக்கு கடத்தி வந்ததும்’ தெரியவந்தது.
இதையடுத்து 2 பேைரயும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர் மற்றும் 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Next Story