சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்


சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:53 AM IST (Updated: 10 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

சிவகிரி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு தடுப்பூசி மருந்து வரவில்லை.
இதுபற்றி அறியாமல் வேட்டுவபாளையம், நம்ம கவுண்டம்பாளையம், சிலுவம்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆதார் கார்டுடன் காலை 5.30 மணிக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காத்திருக்கிறார்கள். காலை 7 மணி வரை இருக்கும் அவர்கள் தடுப்பூசி மருந்து வரவில்லை என்ற தகவல் தெரிந்தவுடன், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘நோய் தொற்று அதிகமாக உள்ள சிவகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் முகாம்கள் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story