மதுரையில் புதிதாக 279 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 279 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jun 2021 4:56 PM GMT (Updated: 2021-06-10T22:26:48+05:30)

மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,177 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் புதிதாக 279 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,ஜூன்.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,177 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் புதிதாக 279 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாவட்டத்தில் 279 பேருக்கு மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 
கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 320 ஆக உள்ளது.
1,177 பேர் குணம் அடைந்தனர்
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,177 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இவர்களையும் சேர்த்து நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 457 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் சிகிச்சை பெறுேவாரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 
அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி மதுரையில் 7 ஆயிரத்து 854 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிக அளவில் காலியாகி வருகிறது.
6 பேர் உயிரிழப்பு
இதனிடையே மதுரையில் நேற்று 4 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், ஒருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,009 ஆக உள்ளது.

Next Story