மணல் திருடிய 2 ேபர் கைது


மணல் திருடிய 2 ேபர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 1:06 AM IST (Updated: 11 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

சாக்கு மூடைகளில் மணல் திருடிய 2 ேபர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான்,ஜூன்.
சோழவந்தான் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணன் தலைமையில் போலீசார் வைகைக் கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு வைகை ஆற்றுப்பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 53), கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (21) ஆகியோர் சாக்கு மூடைகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து மணலை பறிமுதல் செய்தனர்.

Next Story