மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + STBI Parties protest

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை,ஜூன்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அவைகள் மீதான அதிகப்படியான வரி விதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கீழவெளிவீதி அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, செயலாளர் சிக்கந்தர், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி கதிஜா பீவி, மாநில செயற்குழு உறுப்பினர் நசரத் பேகம், புறநகர் பொறுப்பாளர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் வில்லாபுரம் பகுதியில் மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியுடன் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.