மாவட்ட செய்திகள்

பணம் பறித்த 2 பேர் கைது + "||" + 2 arrested for extorting money from a teenager

பணம் பறித்த 2 பேர் கைது

பணம் பறித்த 2 பேர் கைது
வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,ஜூன்.
மதுரை ஆவின்நகர் சாஸ்தா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 20). இவர் அண்ணாநகர் அன்புநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரை கத்தியை காட்டி வழிமறித்தனர். பின்னர் அவர்கள் முருகனை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புநகரை சேர்ந்த வடிவேல்முருகன் (26), பாண்டியராஜன் (25) ஆகியோரை கைது செய்தனர்.