திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நடுரோட்டில் நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நடுரோட்டில் லாரி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 4 மணி அளவில் சென்றபோது திரும்ப முடியாமல் நின்றது.
இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி ரோட்டோரமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
லாரி திரும்ப முடியாமல் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story