கொரோனா பாதிக்கப்பட்ட தம்பதி பலி


கொரோனா பாதிக்கப்பட்ட தம்பதி பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 10:09 PM GMT (Updated: 10 Jun 2021 10:09 PM GMT)

தாராபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

தாராபுரம்
தாராபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட தம்பதி பரிதாபமாக இறந்தனர். 
கொரோனா தாக்குதல்
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்தது. அதன் பயனாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தாக்குதல் காரணமாக தாராபுரம் பகுதியில் தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். 
அது பற்றிய விவரம் வருமாறு:-
தம்பதி பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூர்ணிமா (35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. 
இந்த நிலையில் சக்திவேலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அது அவரது மனைவிக்கும் பரவியது. இதையடுத்து அவர்கள் இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் நேற்று அடுத்தடுத்து இறந்தனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story