மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது + "||" + Made in Kanchipuram Including 2 boys 5 people arrested

காஞ்சீபுரத்தில் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

காஞ்சீபுரத்தில் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
காஞ்சீபுரத்தில் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தார்.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவில் அருகே, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி என்பவர், கடந்த 6-ந்தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தி முனையில் மிரட்டி செல்போனை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா அறிவுரையின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலத்தை சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (வயது 22), விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூரை சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் 2 சிறுவர்கள் என 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையொட்டி அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த செல்போன்கள் மற்றும் திருடிச்சென்ற இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்.