மாவட்ட செய்திகள்

கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை + "||" + Home and house flu testing in Lower Vellore and Nagore areas

கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை

கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
கீழ்வேளூர், நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது.
சிக்கல்,

கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 9 குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த பணிகளை கீழ்வேளூர் வட்டார கொரோனா தடுப்பு பணி மண்டல அலுவலர் ஜெயசித்ரகலா, தாசில்தார் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாகையை அடுத்த நாகூரில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 10 வார்டுகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பணியில் 15 குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதேபோல் கடைகளிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் ஊராட்சியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு, சளி உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். .இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா, ஒன்றிய ஆணையர் சரவணன், திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு, வீடாக 2 முறை சென்று கணக்கெடுக்கும் தன்னார்வலர்கள்
ஊட்டி நகராட்சியில் யாருக்கேனும் தொற்று அறிகுறி உள்ளதா? என வீடு, வீடாக 2 முறை சென்று தன்னார்வலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
2. வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி: மலைவாழ் மக்கள் அலறியடித்து ஓட்டம்
வீடு,வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டதால் மலைவாழ் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
3. 2-வது தவணை ரூ.2 ஆயிரம்-14 வகையான பொருட்கள் பெற - வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம்
2-வது தவணை ரூ.2 ஆயிரம்-14 வகையான பொருட்களை பெற வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
4. வீடு, வீடாக சென்று ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி - பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் தகவல்
பட்டுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கூறினார்.
5. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? சேலத்தில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்
சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? என சேலத்தில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.