கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை


கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 11 Jun 2021 10:24 PM IST (Updated: 11 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம்: 

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் நேற்று மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், வனச்சரகர் அன்பு ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

அவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தினர். தமிழக-கேரள எல்லை பகுதியான மந்திபாறை, ஏகலூத்து, கோச்சரி ஆகிய வனப்பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். 


ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சி வைக்கவில்லை என தெரியவந்தது. கம்பம், சின்னமனூர், ஹைவேவிஸ், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிந்தால் உடனடியாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story