விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் சாவு


விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 11 Jun 2021 5:55 PM GMT (Updated: 11 Jun 2021 5:55 PM GMT)

வலங்கைமான் அருகே விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே விஷம் கலந்த உணவை தின்ற ஆடுகள் இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இறந்துகிடந்த ஆடுகள்
வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் காமராஜர் காலனி பகுதியில் 200-க்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாய நிலப்பகுதியில் பல்வேறு ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றுள்ளன. ஆனால் பல்வேறு இடங்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் உடனே ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 
விஷம் வைத்த உணவு
இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்கள் வலங்கைமான் போலீசாருக்கு தெரிவி்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  மர்மநபர்கள் வைத்த விஷம் கலந்த உணவை ஆடுகள் தின்றதால் இறந்து கிடந்தது தெரியவந்தது.

Next Story