காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாடிப்பட்டி,ஜூன்.
வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி ஊராட்சி மேட்டுராசன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரியும், தினமும் குடிநீர் வினியோகிக்கக் கோரியும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பஸ் நிறுத்தம் முன்பு காலிக் குடங்களுடன் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அகத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆதிரையன் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் மாரிக்கண்ணன், தொழிலாளர் பேரவை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேட்டுராசன்பட்டி ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story