283 பேருக்கு கொரோனா தொற்று


283 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 Jun 2021 1:29 AM IST (Updated: 12 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 7 பேர் உயிரிழந்தனர்.

மதுரை, ஜூன்.
மதுரையில் நேற்று 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 7 பேர் உயிரிழந்தனர்.
283 பேர் பாதிப்பு
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நேற்று 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
7 பேர் உயிரிழப்பு
மேலும் நேற்று ஒரே நாளில் 1,060 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இவர்களை சேர்ந்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சிகிச்சை பெறுவோ ரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 
அதன்படி நேற்றைய நிலவரப்படி மதுரையில் 7 ஆயிரத்து 77 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதனிடையே மதுரையில் நேற்று 7 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். இதன் மூலம்  இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016 ஆக உயர்ந்துள்ளது.

Next Story