ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.
வாடிப்பட்டி,ஜூன்.
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.
இந்த ஏலத்திற்கு விற்பனைக்குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 38 விவசாயிகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 715 தேங்காய்களை 49 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 13 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்ச விலையாக ரூ.14.50-க்கும் குறைந்த பட்சமாக ரூ.8.35-க்கும் சராசரியாக ரூ.9.96-க்கும் ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 3 விவசாயிகளின் 228 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்சமாக ரூ.92-க்கு ஏலம் எடுத்தனர்.
Related Tags :
Next Story