10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது
10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மதுரை,ஜூன்.
மதுரை கூடல்புதூரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர்ராஜா (வயது 23), கொத்தனார்.
இவர் தாய், தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகினார். மேலும் அந்த மாணவிக்கு ஆறுதலாக இருப்பது போன்று நடித்து மாணவியை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நாளடைவில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வருவதை கண்டு அவரது பாட்டி கேட்டுள்ளார். ஆனால் அந்த மாணவி எதுவும் தெரிவிக்க வில்லை. இந்த நிலையில் மாணவியை டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவியை அழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அதில் சிக்கந்தர் ராஜா தன்னை காதலிப்பதாக கூறி அடிக்கடி பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story