பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:49 AM IST (Updated: 12 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,ஜூன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தல்லாகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர்  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும்,  மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். 
இதைத் தொடர்ந்து கே.கே.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நலிந்த தொண்டர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் காங்கிரஸ் துணை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி பி.ஜே.காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் நாஞ்சில் பால் ஜோசப், வழக்கறிஞர் பிரிவு முத்துப்பாண்டி, நீதி, ராஜாராம், பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் முத்துக்குமார், விவசாய பிரிவு ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் மாநில செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை கழக பேச்சாளர் பொன் மனோகரன், மதுரை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தணக்கன்குளத்தில் கிளை தலைவர் பொன்மகாலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை தொகுதி பொறுப்பாளர் பழனி குமார் தொடங்கி வைத்தார். 

Next Story