பெருந்துறையில், வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது
பெருந்துறையில், வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது
ஈரோடு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி
இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்துறை பஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சண்முகம், ராவுத்குமார், ஆண்ட முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படுவதை வலியுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் முன்னாள் வட்டார தலைவர் சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், நடராஜ், சக்திவேல், மணி, வேலுசாமி, திருவாச்சியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் நடராஜ், பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். கொடுமுடியில் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மொடக்குறிச்சியில் வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், சிவகிரி, ஒத்தக்கடை, கணபதிபாளையம், கருமாண்டம்பாளையம், அறச்சலூர், எழுமாத்தூர், விளக்கேத்தி, ஈங்கூர், சென்னிமலை, காஞ்சிக்கோவில், எல்லீஸ்பேட்டை உள்பட சுமார் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story