நகராட்சி ஆணையர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில், நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலையில் அதிக அளவிலானோர் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் வீடுதோறும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து வருகின்றனர்.
இந்த பணியில் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட பாவாப்பேட்டை தெரு, வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா பரிசோதனை பணிகளை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story