நாளை மின்தடை

சிங்கம்புணரி, கல்லல், புதுவயல் பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது.
சிங்கம்புணரி,
இந்த தகவலை சிங்கம்புணரி உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
கல்லல் கண்டரமாணிக்கம் பிரிவில் கல்லல், மாலைகண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, மரிங்கிப்பட்டி பட்டமங்கலம், குருந்தம்பட்டு, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், செம்பனூர், வெங்கட்ராமபுரம், செவரக்கோட்டை, தேவபட்டு ஆகிய பகுதிகளிலும் புதுவயல் பிரிவில் புதுவயல் கானாடுகாத்தான் பிரிவில் கானாடுகாத்தான், நெற்புகப்பட்டி, ஆத்தங்குடி, நேமத்தான்பட்டி உ.சிறுவயல், பலவான்குடி, ஆவுடைப் பொய்கை ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story